செய்திகள்
கோப்புபடம்

அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

Published On 2021-10-01 09:18 GMT   |   Update On 2021-10-01 09:18 GMT
காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காததால் ஒரு அங்கன்வாடி பணியாளர், கூடுதலாக வேறொரு மையத்தை நிர்வகிக்க வேண்டியுள்ளது.
உடுமலை:

உடுமலையில் 143 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களை அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் நிர்வகித்து வருகின்றனர். இவர்கள் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சத்துணவு, சுகாதாரம், முன்பருவ கல்வியை வழங்கி வருகின்றனர்.

இதுதவிர வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இணை உணவு வழங்குவதுடன் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மொத்தம் உள்ள மையங்களில் 13 அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது.

காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காததால் ஒரு அங்கன்வாடி பணியாளர், கூடுதலாக வேறொரு மையத்தை நிர்வகிக்க வேண்டியுள்ளது. இதனால் இம்மையங்களின் பலன்களை முழுமையாக பெற முடியாமல் குழந்தைகள், வளரிளம் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் பரிதவிக்கின்றனர். 

இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் கூறுகையில்:

காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பணியில் இருக்கும் பணியாளர்களை கொண்டு அங்கன்வாடி மையங்கள் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டும் வருகின்றன என்றனர்.
Tags:    

Similar News