செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை - கணக்கில் வராத ரூ.36 ஆயிரம் பறிமுதல்

Published On 2021-10-01 10:10 GMT   |   Update On 2021-10-01 10:10 GMT
சோதனையின்போது புதிய மின் இணைப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களின் முகவரி, விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது குறித்து ஆய்வு செய்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் அவிநாசி சாலை குமார் நகர் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம், வடக்கு மின் வாரிய அலுவலகம், 2 துணை மின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

இங்கு புதிய மின் இணைப்புகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்றிரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது புதிய மின் இணைப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களின் முகவரி, விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது குறித்து ஆய்வு செய்தனர்.

இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.36 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பணம் குறித்து விசாரணை நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News