செய்திகள்
ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.

திருப்பூரில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

Published On 2021-10-01 11:00 GMT   |   Update On 2021-10-01 11:00 GMT
வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் ஆக்கிரமிப்பு இடங்களை அளந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டது.
திருப்பூர்:

திருப்பூர் கூலிப்பாளையம் நால்ரோடு பகுதியில் ஏரியை தனியார் பள்ளி நிர்வாகம் ஆக்கிரமித்து இருந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர் தாமோதரன் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம்  ஆக்கிரமிப்பு இடங்களை அளந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்பூர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

இதையடுத்து திருப்பூர் வடக்கு தாசில்தார் ஜெகநாதன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இன்று இடத்தை அளந்து அங்கு கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை இடித்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News