செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகளிடம் ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவு

Published On 2021-10-30 06:24 GMT   |   Update On 2021-10-30 06:24 GMT
ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் முன்னாள் நிர்வாகிகள் வருகிற 2-ந்தேதி காலை 11 மணிக்குள் நேரில் ஆஜராகி தெரிவிக்கலாம்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகர மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளிடம் சங்கம் தொடர்பான கணக்கு விபரங்கள், ஆவணங்களை ஒப்படைக்க காலக்கெடு விதித்து பழைய நிர்வாகிகளுக்கு மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு செயல்பட்டு வந்த திருப்பூர் மாநகர மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் கூடி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தது. 

இதற்கு பழைய நிர்வாகிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து புதிய நிர்வாகிகள், திருப்பூர் மாவட்ட பதிவாளரிடம் (நிர்வாகம்) புகார் அளித்தனர்.

இதையடுத்து சங்கம் தொடர்பான அனைத்து பதிவேடுகள், கணக்குகள், சங்க கூட்ட நடவடிக்கை பதிவேடுகள், உறுப்பினர்களின் பதிவேடுகள் மற்றும் சங்கம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கடிதம் கிடைத்த நாளில் இருந்து, 7 நாட்களுக்குள் புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

இதற்கு ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் முன்னாள் நிர்வாகிகள் வருகிற 2-ந்தேதி காலை 11 மணிக்குள் நேரில் ஆஜராகி தெரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு சங்கங்கள் பதிவு செய்தல் சட்டம், 1975 மற்றும் பிரிவு, 38 ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News