செய்திகள்
எஸ்வி. பூமிநாதன்.

பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் - காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு கோரிக்கை

Published On 2021-11-01 08:15 GMT   |   Update On 2021-11-01 09:51 GMT
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக சிறு குறு நிறுவனங்கள் மற்றும் லட்சக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
திருப்பூர்:

பட்டாசு தொழிலாளர்களின் நலன் கருதி பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.   

இதுகுறித்து காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பின் மாநில தலைவர் எஸ்வி. பூமிநாதன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக சிறு குறு நிறுவனங்கள் மற்றும் லட்சக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். 

இந்த சூழ்நிலையில் தமிழக அரசு பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டை அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்றதாகும். 

ஏற்கனவே சீன பட்டாசு வருகை, பல மாநிலங்களில் பட்டாசு விற்பனை தடை, இப்படி பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகி சிக்கி தவித்து வரும் பட்டாசு தொழிலாளர்களை மனதில் கொண்டு தமிழக அரசு உடனடியாக நேர கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் .

மேலும் தமிழர் பண்டிகைகளில் மிக முக்கியமான பண்டிகையான தீபாவளி திருநாளில் புத்தாடை அணிந்து குழந்தைகளுடன் பட்டாசு வெடித்து மகிழ்வது தான் தீபாவளிப் பண்டிகையின் சிறப்பு. 

அப்பேர்பட்ட பாரம்பரியமிக்க தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடிட பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News