செய்திகள்
கோப்புபடம்

மடத்துக்குளம் பழைய சோதனைச்சாவடி பகுதியில் டிவைடர் அமைக்க கோரிக்கை

Published On 2021-11-14 06:41 GMT   |   Update On 2021-11-14 06:41 GMT
தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கடைகள், வீடுகள் உள்ளன. ஒரு புறத்திலிருந்து மறுபுறம் சென்று திரும்பும் தேவை மக்களுக்கு அதிகமாக உள்ளது.
மடத்துக்குளம்:

மடத்துக்குளம், அமராவதி ஆற்றுப்பாலம் நுழைவாயில் பகுதியில்  பழைய  சோதனைச்சாவடி  உள்ளது. இந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலை வளைவாகவும், மேடு பள்ளமாகவும் உள்ளதால் வேகக்கட்டுப்பாடின்றி செல்கின்றன.

தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அமராவதி ஆற்றுக்குச்செல்லும் பாதை , வாய்க்காலுக்கு செல்லும் பாதை, அரசமரத்தடி செல்லும் பாதை ஆகியவை உள்ளன.இந்தப்பகுதியிலிருந்து வரும் வாகனங்கள்  சாலையை  கடக்க முயற்சிக்கும் போது பல நேரம் விபத்துகள் நடக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கடைகள், வீடுகள் உள்ளன. ஒரு புறத்திலிருந்து மறுபுறம் சென்று திரும்பும் தேவை மக்களுக்கு அதிகமாக உள்ளது.இதோடு 30-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் சாலையை  கடந்து பள்ளி சென்று திரும்புகின்றனர்.

இதனால் இந்த இடத்தில் வாகனங்கள் வேகம் குறைவாக இயக்குவது பாதுகாப்பை கொடுக்கும்.ஆனால் வேகக்கட்டுப்பாடு இன்றி வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன.

விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்குத்தீர்வாக பழைய சோதனைச்சாவடி பகுதியில் டிவைடர் அமைப்பதோடு வேக கட்டுப்பாட்டை கண்காணிக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News