உள்ளூர் செய்திகள்
தமிழகத்தில் புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
உள்ளது. அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களில் புதிதாக தொற்று கண்டறியப்படவில்லை.
தமிழகத்தில் கொரேனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில், இன்றைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 151 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரம் 158-ஆக பதிவாகி இருந்தது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,51,171 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று அதிகபட்சமாக 51 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களில் புதிதாக தொற்று கண்டறியப்படவில்லை. இதர மாவட்டங்களில் ஒற்றை இலக்கில் புதிய பாதிப்பு பதிவாகி உள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,145-ஆக குறைந்துள்ளது. 418 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர்.
இதையும் படியுங்கள்.. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு இந்தியா ஆதரவு?- தீயாய் பரவும் புகைப்படம்