உள்ளூர் செய்திகள்
வருவாய் ஆய்வாளரை மிரட்டியவர் மீது வழக்கு
மத்திய சிறை முகாமில் வருவாய் ஆய்வாளரை மிரட்டியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி :
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. அங்கு போலி பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கிய வெளிநாட்டவர் உள்ளனர்.
இந்நிலையில் துணை கலெக்டர் உடன் ,வருவாய் ஆய்வாளர் ரவி சிறப்பு முகாமுக்குச் சென்றார் . பின்னர்அங்கு ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த நிஷாந்தன் (வயது 38) என்பவர் வருவாய் ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்து திட்டி, மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் ரவி கொடுத்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.