உள்ளூர் செய்திகள்
.

எருது விடும் விழா

Published On 2022-04-07 15:45 IST   |   Update On 2022-04-07 15:45:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே எருது விடும் விழா நடந்தது.
வேப்பனப்பள்ளி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கங்கோஜி கொத்தூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மாரியம்மன் திருவிழா நடைபெறுவது வழக்கம். 

இந்த ஆண்டும் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நேற்று எருது விடும் விழா விமர்சையாக நடைபெற்றது. 

 விழாவில் சூளகிரி, பேரிகை, பாகலூர், ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி, ராயக்கோட்டை காவேரிப்பட்டினம், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, பாலக்கோடு ஆகிய பகுதிகளில் இருந்து 300&க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த விழாவில் 100 மீட்டர் இலக்கை காளைகள் சீறிப்பாய்ந்து சென்றது. 

இதில்  இலக்கை வெகு விரைவில் கடந்த சூளகிரி அருகே உள்ள தீன்னூர் கிராமத்தை சேர்ந்த காலபைரவ காளைக்கு 55 ஆயிரம் முதல் பரிசையும் ,வேப்பனப்பள்ளி அருகே உள்ள மாதேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜவுளி காளை  2 &ம் பரிசையும் தட்டி சென்றது. 

விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News