உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், கவிதை, பாடல் எழுதுதல், கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

Published On 2022-04-07 15:57 IST   |   Update On 2022-04-07 15:57:00 IST
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், கவிதை, பாடல் எழுதுதல், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற 16 மற்றும்17-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
திருச்சி:

மதநல்லிணக்கம் அல்லது விடுதலை  போராட்டம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி வரும் 16-ந்தேதி எல்.ஐ.சி. காலனியில் உள்ள நுண்கலைப்பள்ளியில் காலை 10.30 மணிக்கு நடை பெற உள்ளது. வேற்று-மையில் ஒற்றுமை என்ற தலைப்பில் கவிதை போட்டி,

விடுதலை போரில் வீழ்ந்த மலர்கள் என்ற தலைப்பில் பாடல் எழுதுதல், தனித்துவம் நமது உரிமை, பன்மைத்துவம் நமது வலிமை என்ற தலைப்பில் கட்டுரை போட்டிகளும் மற்றும் பேச்சுப் போட்டியும் வரும் 17-ந்தேதி உறையூர்  வாத்துக்கார தெருவில் உள்ள டி.என். எம்.எஸ்.ஆர்.ஏ. அரங்கத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
 
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் மூன்று பரிசுகள் தவிர ஆறுதல் பரிசாக புத்தகங்கள் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் அனை வருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இத்தகவலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநகர செயலாளர் சிவ.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

Similar News