உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி ஏரிக்கரையில் ஆண் பிணம்
கிருஷ்ணகிரி ஏரிக்கரையில் பிணமாக கிடந்த ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி லிங்கம்மா ஏரிக்கரை காலபைரவர் கோவில் அருகே நேற்று அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி வெங்கடாபுரம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏரிக்கரையில் இறந்து கிடந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.