உள்ளூர் செய்திகள்
மர்ம பொருளை படத்தில் காணலாம்.
வடமதுரை: வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு
- தெளிவான விளக்கம் அளிக்கப்படாத நிலையில் இன்று பகல் 12 மணியளவில் வானில் இருந்து மர்ம பொருள் விழுந்தது.
- சுமார் 1 கிலோ எடை கொண்ட அந்த பொருள் வெடிகுண்டாக இருக்குமோ என பொதுமக்கள் அச்சம்.
வடமதுரை:
வடமதுரை, அய்யலூர் பகுதியில் அவ்வப்போது திடீரென வெடிச்சத்தம் கேட்டு வருகிறது. இது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படாத நிலையில் இன்று பகல் 12 மணியளவில் வானில் இருந்து மர்ம பொருள் விழுந்தது. இந்த சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சுமார் 1 கிலோ எடை கொண்ட அந்த பொருள் வெடிகு ண்டாக இருக்குமோ என பொதுமக்கள் சந்தேகித்து புகைப்படம் எடுத்து வலை தளங்களில் பதிவிட்டு ள்ளனர். அது வைரலாகி வருகிறது. எனவே அதிகாரிகள் இந்த மர்ம பொருள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.