உள்ளூர் செய்திகள்
தாமரைக்குளத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைக்கு அபராதம்
- தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் செயல்அலுவலர் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
- தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்ற கடைகளுக்கு ரூ.1500 அபராதம் விதித்தனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் செயல்அலுவலர் ஆளவந்தார் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் தடை செய்யபப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு இருந்ததை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து கடை உரிமையாளருக்கு ரூ. 1500 அபராதம் விதித்தனர். ஆய்வின்போது இளநிலை உதவியாளர் பாத்திமா, வரித்தண்டலர், பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு செயல்அலுவலர் ஆளவந்தார் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதேபோல்சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் செயல் அலுவலர் ரோகிணி தலைமையில் பணியாளர்கள் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது ஒட்டல்கள் மற்றும் கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.