உள்ளூர் செய்திகள்

கடையம் அருகே பள்ளிக்கு சென்ற மாணவன் மதுரையில் மீட்பு- கடத்தப்பட்டதாக கூறிய தகவலால் பரபரப்பு

Published On 2023-06-17 08:06 GMT   |   Update On 2023-06-17 08:06 GMT
  • 4 பேர் தன்னை காரில் மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.
  • மாணவன் மாறி மாறி தகவல் தெரிவிப்பதால் அவரை உண்மையிலேயே யாரேனும் கடத்திச் சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெல்லை:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள புலவனூர் பொன்மலை நகரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர் நேற்று அவன் வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றான். ஆனால் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து தேடிய நிலையில் மதுரையில் இருந்து தொடர்பு கொண்ட போலீசார் மாணவன் மதுரையில் இருப்பதாகவும், உடனே வந்து அழைத்துச் செல்லலாம் எனவும கூறியுள்ளனர்.

உடனே மாணவனின் பெற்றோர் அங்கு சென்று அவனை சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து மாணவனிடம் கேட்டபோது நேற்று பள்ளிக்கு செல்லும்போது சைக்கிள் பஞ்சர் ஆகிவிட்டதாகவும், அப்போது அந்த வழியாக வந்த 4 பேர் தன்னை காரில் மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் மதுரையில் இருந்த போலீசாரிடம் பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை, அதனால் இங்கு வந்து விட்டதாக கூறியுள்ளார்.

மாணவன் மாறி மாறி தகவல் தெரிவிப்பதால் அவரை உண்மையிலேயே யாரேனும் கடத்திச் சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News