உள்ளூர் செய்திகள்

விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு நடத்துவதற்கான வரவேற்பு அமைப்புக்குழு கூட்டம்

Published On 2022-11-10 14:32 IST   |   Update On 2022-11-10 14:32:00 IST
  • அனைத்து கிராம நிலமற்ற விவசாயத் தொழிலாலர்களுக்கு 2 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்க வேண்டும்.
  • விவசாய தொழிலாளர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 200 நாள் வேலையும் தினக்கூலி ரூ.600 வழங்கவேண்டும்.

தருமபுரி,

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு நடத்துவதற்கான வரவேற்பு அமைப்புக்குழு கூட்டம் தருமபுரி நான்கு ரோடு அருகே உள்ள முத்து இல்லத்தில் நடைபெற்றது.

வரவேற்புகுழு அமைப்பு கூட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்து தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரவி, பொருளாளர் முருகன் ,மாவட்ட துணைத்தலைவர்கள் கோவிந்தசாமி,எல்லப்பன் ,ஒன்றிய கவுன்சிலர் உதயகுமார்,மாது,ஜெயராமன்,குமரேசன் ,கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிலமற்ற விவசாயத் தொழிலாலர்களுக்கு 2 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 200 நாள் வேலையும் தினக்கூலி ரூ.600 வழங்கவேண்டும்.

வீடற்ற மக்களுக்கு ரூ 10,00,000 -ல் வீடு கட்டிக் கொடுக்கவேண்டும். 60 வயது பூர்த்தி அடைந்த அனைத்து விவசாயத் தொழிலர்களுக்கும் ரூ.3000 பெண்சன் வழங்கவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட மாநாடு, நவம்பர் 29- ம் தேதியன்று காரிமங்கலம் தில் மாநாடு சிறப்பாக நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News