உள்ளூர் செய்திகள்

கல்லட்டி மலைப் பாதையில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து

Published On 2023-06-10 14:34 IST   |   Update On 2023-06-10 14:34:00 IST
  • 20 அடி பள்ளத்தில் ஆம்புலன்ஸ் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
  • காயம் அடைந்த டிரைவர் நவீன்குமாா் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த மசினகுடி பகுதியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் நோயாளி ஒருவரை அழைத்துக் கொண்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று வந்தனா். ஆஸ்பத்திரியில் நோயாளியை சோ்த்து விட்டு மீண்டும் மசினகுடிக்கு ஆம்புலன்ஸ் திரும்பி வந்து கொண்டிருந்தது. கல்லட்டி மலைப் பாதையில் 18-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு 20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஆம்புலன்ஸ் டிரைவர் நவீன்குமாா் (39), மருத்துவ உதவியாளா் பிரகாஷ் (29) ஆகியோா் காயமடைந்தனா். இதில் டிரைவர் நவீன்குமாா் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து புதுமந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News