சங்கரன்கோவிலில் விழிப்புணர்வு கூட்டம் - ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
- சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- ஒவ்வொரு பள்ளியிலும் கூடுதல் வகுப்பறை வசதி செய்து கொடுக்கபட்டுள்ளதாக ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நெல்லை மனித உரிமை கல்வி மற்றும் காப்பு களம், பெங்களூர் குழந்தை உரிமையும் நீங்களும், மக்கள் நல்வாழ்வு இயக்கம் இணைந்து குழந்தைகளுக்கான நல வாழ்வு மேம்பாட்டிற்கு சமூக நலத்துறை, சுகாதார துறை மற்றும் கல்வி துறை ஒருங்கிணைந்த செயல்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் லாலா சங்கர பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் மதிமாரிமுத்து, சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனித உரிமை களம் ராதா வரவேற்று பேசினார். மனித உரிமை களம் இயக்குனர் பரதன் கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்.
கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
குழந்தைகள் தான் நம் நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்க கூடியவர்கள். அவர்களுக்கு நல்ல சத்துணவு, மருத்துவம், தரமான கல்வி ஆகிய மூன்றும் கிடைப்பதற்காக இந்த 3 துறையில் உள்ளவர்கள் சிறப்பாக பணி செய்ய வேண்டும். பெண்கள் பாதுகாப்பை அரசு முழுமையாக நடைமுறை ப்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு பள்ளியிலும் சென்று கூடுதல் வகுப்பறை, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்கபட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் துறை மூலம் இணைந்து செயல் படுகிறது. குழந்தை பாதுகாப்பு உதவி எண் 1098 அனைத்து பாட புத்தகத்தில் அச்சிட்டுவழங்கப்படுகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறை பாட்டை போக்க சட்ட மன்றத்தில் குரல் எழுப்பபடும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சுடலை, மக்கள் நல்வாழ்வு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், , சங்கரன் கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) சந்திரா, கரிவலம்வந்தநல்லூர் அரசு மருத்துவர் சரவண குமார், குருவிகுளம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நர்மதா, மேலநீலிதநல்லூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுருதி, ஊர் நல விரிவாக்க அலுவலர் பானு ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.
இதில் தலைமை ஆசிரி யர்கள், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், குருவி குளம் ஆகிய ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், சுகாதார மேற் பார்வையாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பெண்கள் பாதுகாப்பு துறை பணியாளர்கள், கிராம வார்டு உறுப்பினர்கள், சங்க பெண்கள், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 150 பேர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை நெல்லை மனித உரிமை கல்வி மற்றும் காப்பு களம், மக்கள் நல்வாழ்வு இயக்கம், பெங்களூர் குழந்தை உரிமையும் நீங்களும் அமைப்பினர் செய்திருந்தனர். மனித உரிமை களம் பணியாளர் வேலம்மாள் நன்றி கூறினார்.