விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்
எஸ்.தங்கப்பழம் யோகா இயற்கை மருத்துவ கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- நிகழ்ச்சியில் ஜீரண மண்டல நோய்கள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் கல்லூரி விரிவுரையாளர் டாக்டர் அரவிந்த் பேசினார்.
- மருத்துவ கல்லூரியின் அனைத்து மாணவ- மாணவிகள், உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மையத்தில் ஜீரண மண்டலம் நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மருத்துவ கல்லூரி முதல்வர் வினுதா முன்னிலை வகித்தார். இதில் ஜீரண மண்டல நோய்கள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் கல்லூரி விரிவுரையாளர் டாக்டர் அரவிந்த் பேசினார். உணவு முறைகள் மற்றும் அதற்கான யோகா பயிற்சிகள் குறித்து மருத்துவ கல்லூரி மாணவிகள் மோகன ஸ்வேதா, விஜயலட்சுமி மற்றும் தாரணி ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கு பெற்றனர். மேலும் மருத்துவ கல்லூரியின் அனைத்து மாணவ- மாணவிகள், உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.