உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் சிறை வளாகம் முன்பு நானும் ரவுடிதான் என மிரட்டிய வாலிபர் சமூக வலைதளங்களில் பரவுகிறது

Published On 2022-09-01 15:10 IST   |   Update On 2022-09-01 15:10:00 IST
  • மத்திய சிறை வளாகம் முன்பாக 2 வாலிபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்..
  • இன்றைய வளர்ந்து வரும் தலை முறையினரை தவறான பாதையில் அழைத்துச் செல்வதாக உள்ளது.

விழுப்புரம்: 

விழுப்புரம் அருகே வேடம்பட்டு மத்திய சிறை வளாகம் முன்பாக 2 வாலிபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மற்றும் தொலைக்காட்சிகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இந்நிலையில் அவர்கள் நானும் ரவுடியாக போகிறேன் என்னும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. குற்றவாளிகளை சீர்திருத்தவும் மற்றும் குற்ற சம்பவங்களை முற்றிலும் குறைப்பதற்காகவும் உள்ள மத்திய சிறை வளாகம் முன்பே தற்போதுள்ள இளைய தலைமுறை வாலிபர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மனவேதனை அளிக்கிறது என்று கூறுகின்றனர்.

இது இன்றைய வளர்ந்து வரும் தலை முறையினரை தவறான பாதையில் அழைத்துச் செல்வதாக உள்ளது. மேலும் அவர்கள் இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறையிலும் மற்றும் இது குறித்து வீடியோ எடுக்கப்பட்டு பதிவிடப்பட்டுள்ள எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையத்திலும் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசார் இந்த வீடியோ குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அந்த வாலிபர்கள் பிடிபட்டு கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது போன்ற ஒழுங்கீனமற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உயர் அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.

Tags:    

Similar News