உள்ளூர் செய்திகள்
- ஒட்டன்சத்திரத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
- முகாமில் 28 யூனிட் ரத்தம் பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது.
திண்டுக்கல்:
ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் ரத்ததான முகாம் கல்லூரி முதல்வர்துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. கொ.கீரனூர் அரசு வட்டார மருத்துவமனை மருத்துவர் காசிமுருக பிரபு முன்னிலை வகித்தார்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன், மின்னணு மற்றும் மின்னணுவியல் உதவி பேராசிரியர் சாம் ஸ்டான்லி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஹெரால்டு ஜாக்சன், ஆறுமுகம், வட்டார மருத்துவமனை மேற்பார்வையாளர் ஜோதிபாசு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முகாமில் 28 யூனிட் ரத்தம் பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர் காந்திமதி செய்திருந்தார்.