உள்ளூர் செய்திகள்

தேன்கனிக்கோட்டையில் இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு

Published On 2023-09-25 15:48 IST   |   Update On 2023-09-25 15:48:00 IST
  • தேன்கனிக்கோட்டையில் முதல் அமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறாக பேசியவர் மீது வழக்கு பதிவு
  • விநாயகர் ஊர்வலத்தின் போது பேச்சு

கிருஷ்ணகிரி மாவட்ட திமுக பிரதிநிதி சக்திவேல் தேன்கனிக்கோட்டை போலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோ ட்டையில் கடந்த 21 ந்தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.

இதையொட்டி பழைய பஸ் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் இந்து முன்னணி சேலம் கோட்டம் தலைவர் சந்தோஷ்குமார் என்பவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் விளை யாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஆகியோரை அவதூ றாகவும் தகாத வார்த்தை களாலும் பேசினார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறி யுள்ளார்.

அதன் பேரில் சந்தோஷ் குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Similar News