சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
- தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
- பலத்த காற்றுடன் மிதமான மழை இன்று பெய்யக் கூடும்.
சென்னை:
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தென் னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஒரு சில இடங் களில் லேசான மழை பெய்யும்.
புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை இன்று பெய்யக் கூடும்.
கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலை பகுதிகளில், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிதமான மழை செய்யக்கூடும். இடி, மின்னலுடன் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. குளிர்ந்த காற்று வீசி வருகிறது. 5 மாதத்திற்கு பிறகு சென்னையில் 2 நாட்களாக மாலையில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.