உள்ளூர் செய்திகள்
செஸ் பெரிய கருப்பன்
கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில் சதுரங்க ஆட்டக்காய்கள் கண்டெடுப்பு- அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
- 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் செஸ் விளையாடிய உள்ளனர்.
- தமிழகம் தான் செஸ் விளையாட்டின் தாயகம்.
திருபுவனம்:
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, நாளை முதல் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் இதை அறிந்து கொள்ளும் வகையில் மாவட்டம் தோறும் இந்த போட்டியை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழர்களுக்கு செஸ் விளையாட்டு ஒன்றும் புதிதானது அல்ல என்றார்.
3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் செஸ் விளையாடியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். கீழடி அகழ்வாராய்ச்சியில் சதுரங்க ஆட்டக்காய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், செஸ் விளையாட்டின் தாயகமே தமிழகம் தான் என்றும் கூறினார்.