உள்ளூர் செய்திகள்

சேலம் வந்த 5 பேருக்கு கொரோனா

Published On 2022-08-22 14:13 IST   |   Update On 2022-08-22 14:13:00 IST
  • சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதி கரித்தும், குறைந்தும் என மாறி, மாறி நிலவி வருகிறது.
  • நேற்று மட்டும் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதி கரித்தும், குறைந்தும் என மாறி, மாறி நிலவி வருகிறது. நேற்று மட்டும் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சேலம் மாநகராட்சியில் 11 பேருக்கும், சேலம் சுகாதார மாவட்டத்தில் ஓமலூர், சங்ககிரி, வீரபாண்டி, தாரமங்கலம், மேச்சேர், கொளத்தூர், எடப்பாடி பகுதிகளில் 10 பேருக்கும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் ஆத்தூர், பனமரத்துப்பட்டி, கெங்கவல்லி, பெத்த நாயக்கன்பாளையம், வாழப்பாடி பகுதிகளில் 7 பேருக்கும், நகராட்சி பகுதி களில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தருமபுரி, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சேலம் வந்த 5 பேருக்கும் தொற்று உறுதி செயயப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இது வரை 1.30 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.28 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,762 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News