களக்காடு அருகே கோவில் விழா தகராறில் வாலிபருக்கு வெட்டு
- செல்வம் மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.
- சப்பரம் தூக்குவதில் செல்வத்திற்கும், பலவேசத்திற்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழக்காடுவெட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் செல்வம் (வயது25). இவர் மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கீழக்காடுவெட்டி அம்மன் கோவில் கொடை விழாவில் சப்பரம் தூக்குவதில் செல்வத்திற்கும், அதே ஊரை சேர்ந்த பலவேசத்திற்கும் (35) தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் செல்வம் ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று அங்குள்ள வீட்டு திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பலவேசம், செல்வத்தை அரிவாளால் வெட்டினார்.
இதில் படுகாயமடைந்த செல்வம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பச்சமால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி பலவேசத்தை தேடி வருகின்றனர்.