உள்ளூர் செய்திகள்

தருமபுரி தூய இருதய ஆண்டவர் பெருவிழா

Published On 2023-07-17 09:13 GMT   |   Update On 2023-07-17 09:13 GMT
  • தொடர்ந்து தூய இருதய ஆண்டவர் தேர் பவனி நடைபெற்றது.
  • இன்று 17-ந்தேதி தூய இருதய ஆண்டவர் ஆண்டு விழா நிறைவுற்று கொடியிறக்கம் நடைபெறும்.

தருமபுரி,

தருமபுரி மரை மாவட்ட தூய இருதய ஆண்டவர் பெருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயாஸ் தலைமையேற்று திருப்பலி உடன் கொடியேற்றி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 9 நாட்கள் நவ நோன்பு நடைபெற்று வந்த நிலையில் நேற்று 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு தூய இருதய ஆண்டவர் தேர் பவனி தொடங்கியது.

அதற்கு முன்னதாக மறைமாவட்ட தலைமை அருள் ராஜ் தலைமையில் திருபலி நடைபெற்றது. இந்த திருப்பலி நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து தூய இருதய ஆண்டவர் தேர் பவனி நடைபெற்றது. இந்த தேர்பவனி எஸ்.வி. ரோடு, பி.எஸ்.என்.எல். அலுவலகம், செங்கொடிபுரம், பஸ்நிலையம் வழியாக தூய இருதய ஆண்டவர் ஆலயத்தை வந்தடைந்தது.

இதனைத் தொடர்ந்து நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் தருமபுரி பங்கு ஆலயத்தின் சார்பில் நடைபெற்றது. இன்று 17-ந்தேதி தூய இருதய ஆண்டவர் ஆண்டு விழா நிறைவுற்று கொடியிறக்கம் நடைபெறும்.

நிகழ்ச்சியில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் தலைமையில் பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளின் நிர்வாகிகளும், ஆயர் இல்ல செயலர், தருமபுரி சமூக சேவை இயக்குனர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

Tags:    

Similar News