உள்ளூர் செய்திகள்

நெல்லை மத்திய மாவட்டம் சார்பில் கருணாநிதி உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மரியாதை

Published On 2023-06-03 09:36 GMT   |   Update On 2023-06-03 09:36 GMT
  • ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
  • அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்லை:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மேயர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலை ராஜா, ஏ.எல்.எஸ். லட்சுமணன், தச்சை பகுதி செயலாளர் சுப்பிரமணியன், மாநகர பொருளாளர் பூக்கடை அண்ணாதுரை, முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, கவுன்சிலர்கள் நித்திய பாலையா, சுந்தர்், அல்லா பிச்சை, சின்னத்தாய், சுப்புலட்சுமி, சகாய ஜூலியட் மேரி, ராஜேஸ்வரி, மாவட்ட பிரதிநிதி இசக்கி பாண்டியன், பேட்டை பகுதி இளைஞரணி மணிகண்டன், வக்கீல்கள் கந்தசாமி, காமினி தேவன், ராஜா முகமது, கல்லூர் பாலா மற்றும் நிர்வாகிகள் சுரேஷ், சிவா, தங்க திருப்பதி, நெல்லை ரவி, முருகன், வினோத், சுடலைமுத்து, ஏ1 அருண், காந்தி, மகேஷ், மணி, தமிழரசன், அருள்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.பின்னர் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு மாநகராட்சி 3-வது வார்டு கவுன்சிலரும், தச்சை மண்டல முன்னாள் சேர்மனுமான சுப்பிர மணியன் ஏற்பாட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சுமார் 120 பேருக்கு இலவச நோட்டு- புத்தகங்கள் வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் ஒடிசா ரெயில் விபத்து காரணமாக தி.மு.க. சார்பில் நலத்திட்டங்கள், இனிப்பு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் அவை வழங்கப்படவில்லை.

தொடர்ந்து மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சாலியர் தெரு, தச்சநல்லூர் அண்ணா சிலை முன்பு என பல்வேறு இடங்களில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News