உள்ளூர் செய்திகள்

மின்கம்பங்களில் கால்நடைகளை கட்ட வேண்டாம் : மின்சாரவாரிய அதிகாரி எச்சரிக்கை

Published On 2023-11-05 13:05 IST   |   Update On 2023-11-05 13:05:00 IST
  • தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வரு கிறது.
  • பொதுமக்கள் பாது காப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கள்ளக்குறிச்சி, நவ.5-

கள்ளக்குறிச்சி மின்சார வாரிய மேற்பார்வை பொறி யாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வரு கிறது. எனவே பொது மக்கள் பருவ மழையாலும், பெருங் காற்றாலும் அல்லது வேறு இயற்கை சீற்றத்தா லோ அறுந்து விழுந்துள்ள மின்சார கம்பி அருகே செல்லக் கூடாது. மேலும் அவ்வாறு மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடி யாக தகவல் தெரிவிக்க வேண்டும். மின்கம்பங்கள் பழுதடைந்து இருந்தாலோ அல்லது அதிலிருந்து போகும் மின்கம்பிகள் பூமியில் இருந்து 15 அடிக்கு கீழ் தொங்கிக்கொண்டு இருந்தாலோ அதனை கடந்தோ அல்லது அருகிலோ செல்ல வேண்டாம். இதுகுறித்து மின்சாரவாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பத்திலோ, அதனை தாங்கும் (ஸ்டே) கம்பிகளிலோ கால்நடை களை கட்டாதீர்கள். மழைக் காலங்ளில் மின் மாற்றிகள், மின்கம்பங்கள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லாதீர்கள். மேற்கண்ட எச்சரிக்கை நடவடிக்கைகளை கடை பிடித்து பொதுமக்கள் பாது காப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News