உள்ளூர் செய்திகள்
உத்திரமேரூரில் டிரைவர் கொலையில் உறவினர் கைது
- இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றபோது ஏற்பட்ட தகராறில் பார்த்திபன் கொலை செய்யப்பட்டார்.
- ராஜூவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடந்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர், நரசிம்மன் நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது30). கார் டிரைவர். அதேபகுதியில் வசித்து வந்த இவரது மாமனார் உடல்நலக் குறைவால் இறந்துபோனார். அவரது இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பார்த்திபன் சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் பார்த்திபன் குத்தி கொலைசெய்யப்பட்டார்.
இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பார்த்திபனின் நெருங்கிய உறவினரான எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த பாண்டியன் என்கிற ராஜூ என்பவர் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதத்தால் இந்த கொலையில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து ராஜூவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.