உள்ளூர் செய்திகள்
கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
- பறக்கும் படை அதிகாரி தலைமையில், குழுவினர் பாகலூரில் சர்ஜாபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- லாரியை சோதனை செய்த போது 6 யூனிட் கற்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது
ஓசூர்,
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் புவியியல் மற்றும் சுரங்க துறை உதவி பொறியாளரும், மண்டல பறக்கும் படை அதிகாரியுமான விஜயலட்சுமி தலைமையில், குழுவினர் நேற்று முனதினம் பாகலூரில் சர்ஜாபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற டிப்பர் லாரியை சோதனை செய்த போது அதில் 6 யூனிட் கற்கள் அனுமதியின்றி கடத்தி வந்தது தெரிய வந்தது-. இது குறித்து அதிகாரி விஜயலட்சுமி, பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் கனிமொழி வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.