உள்ளூர் செய்திகள்

நாட்டு துப்பபாக்கி வைத்திருந்த பெரியசாமியை போலீசார் கைது செய்தனர்.

அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்து இருந்த முதியவர் கைது

Published On 2023-06-17 13:31 IST   |   Update On 2023-06-17 13:31:00 IST
  • வீட்டில் ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது.
  • கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் அடுத்த அத்தியூர் கேர்மாளம் பகுதியை சேர்ந்த பெரியசாமி (49) என்பவர் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்து பயன்படுத்தி வரு வதாக கடம்பூர் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் கடம்பூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவி தலை மையிலான போலீசார் கடம்பூர் அடுத்த அத்தியூர் கேர்மாளம் பகுதிக்கு சென்று பெரியசாமி என்பவரின் வீட்டை சோதனை செய்தனர்.

இதில் சட்ட விரோதமாக வீட்டில் ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து உடனடி யாக கடம்பூர் போலீசார் நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டா வுக்கு பயன்படுத்திய மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர். அவரை கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்த னர்.

Tags:    

Similar News