உள்ளூர் செய்திகள்

3 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை

Published On 2022-11-02 14:51 IST   |   Update On 2022-11-02 14:51:00 IST
  • மனமுடைந்த கிருஷ்ணா வீட்டில் சமையல் அறையில் தனது துப்பட்டாவால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
  • அதனை தொடர்ந்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நம்பியூர்:

நம்பியூர் அருகே உள்ள கோட்டு புள்ளம்பாளையம், காமராஜர் நகர் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவர் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம், நாடோடி காரளி ஆகும். இவருக்கு திருமணமாகி கிருஷ்ணா (27) என்ற மனைவியும், தனுஷா (6) ஹரிஷா (4) அபி (2) என 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சதீஷ்குமார் கோட்டு புள்ளாம்பாளையம் பகுதியில் தங்கி கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சதீஷ்குமாரின் மனைவி கிருஷ்ணாவிற்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று கிருஷ்ணா சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால் மனமுடைந்த கிருஷ்ணா கணவர் சதீஷ்குமார் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் சமையல் அறையில் உள்பக்கம் தாழிட்டு தனது துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் மதிய உணவிற்கு வந்த சதீஷ்குமார் சமையலறை உள்பக்கம் தாழிட்டதை கண்டு உடனடியாக அவரது வேலை செய்யும் மேஸ்திரி நாகராஜ் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் 2 பேரும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கிருஷ்ணா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கிருஷ்ணாவை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர்.

அதனை தொடர்ந்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News