வட மாநில தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
- வேலை பார்க்கும் இடத்தில் சுஜித்குமார் தூக்குபோட்டு கொண்டார்.
- இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு, அக். 23-
பீகார் மாநிலம் முஜபூர் மாவட்டம் சிவதோஷ்பூர் பகுதியை சேர்ந்தவர் சுஜித்குமார் (23). இவர் ஈரோடு கனிராவுத்தர்குளம் பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இவருக்கு அனிஷாதேவி என்பவருடன் கடந்த மே மாதம் பீகாரில் திருமணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மனைவியை அங்கேயே விட்டுவிட்டு சுஜித்குமார் கடந்த ஜூலை மாதம் மீண்டும் ஈரோட்டுக்கு வந்து வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சுஜித்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் வேலை பார்க்கும் இடத்தில் சுஜித்குமார் தூக்குபோட்டு கொண்டார். அதை பார்த்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுஜித்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.