உள்ளூர் செய்திகள்

ஈரோடு ஜவுளிச்சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பு

Published On 2022-08-30 15:46 IST   |   Update On 2022-08-30 15:46:00 IST
  • ஓணம் பண்டிகை வருவதையொட்டி புதிய ஜவுளி ரகங்கள் வரத்தா கியுள்ளன. இதனால் இன்று கூடிய ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக உள்ளது.
  • சந்தையில் சில்லரை வியாபாரம் 40 சதவீதமும், மொத்த வியாபாரம் 30 சதவீதமும் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு:

ஈரோடு ஜவுளி சந்தையானது கனி மார்கெட், பன்னீர்செல்வம் பார்க், திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கி ழமைகளில் ஜவுளிச் சந்தை நடைபெற்று வருகிறது.

வாரந்தோறும் நடைபெறும் இந்த ஜவுளிச் சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து ஜவுளிகளை மொத்த விலையில் வாங்கிச் செல்வார்கள். கடந்த சில வாரங்களாக வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வரும் 8-ந் தேதி ஓணம் பண்டிகை வருவதையொட்டி புதிய ஜவுளி ரகங்கள் வரத்தா கியுள்ளன. இதனால் இன்று கூடிய ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக உள்ளது.

ஓணம் பண்டிகையையொட்டி இன்று ஏராளமான கேரளா வியாபாரிகள் வந்திருந்தனர். ஆனால் மழை காரணமாக மற்ற வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை.

இதனால் மொத்த வியாபாரம் சுமாராகவே இருந்தது. இன்று நடந்த சந்தையில் சில்லரை வியாபாரம் 40 சதவீதமும், மொத்த வியாபாரம் 30 சதவீதமும் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த வாரம் ஓணம் பண்டிகை நெருங்க உள்ளதால் வியாபாரம் களைக்கட்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News