தமிழ்நாடு

கண் நோய் பரவல் விழிப்புணர்வு: தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Published On 2024-11-11 06:37 GMT   |   Update On 2024-11-11 06:46 GMT
  • பொதுவாக, காலநிலை மாறுபடும்போது கண் நோய்கள் ஏற்படுவது வழக்கம்.
  • கண்களிலிருந்து வெளியேறும் கசிவுகள் மூலம் இது பரவுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை:

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொதுவாக, காலநிலை மாறுபடும்போது கண் நோய்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது விழி வெண்படல அழற்சி காரணமாக கண்கள் சிவப்பாதல், கண்களில் நீர் வடிதல், கண்கள் ஒட்டிக் கொள்ளுதல், கண் கூசுதல் போன்றவை ஏற்பட்டு, கண் மருத்துவமனைகளை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாகவும், பள்ளிகளில் சிறுவர், சிறுமியர் அருகருகில் அமர்ந்து கொள்வதன் காரணமாக அவர்களுக்கு இது விரைவாக பரவுவதாகவும், இதற்கு முக்கியக் காரணமாக விளங்குவது பாக்டீரியா அல்லது வைரஸ் என்றும், கண்களிலிருந்து வெளியேறும் கசிவுகள் மூலம் இது பரவுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, கண் நோய் பரவல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும், கண் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அதற்கான மருந்துகளை போதிய அளவில் இருப்பில் வைத்துக் கொள்ளவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையினை உடனடியாக எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News