உள்ளூர் செய்திகள்

வனத்துறை பணியானது வனம், வனவிலங்குகளை பாதுகாக்கும் ஆத்மார்த்தமான பணி- வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேச்சு

Published On 2023-08-11 14:43 IST   |   Update On 2023-08-11 14:43:00 IST
  • ஊட்டி தமிழகம் அரசு விருந்தினா் மாளிகையில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
  • பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து தெரிவிக்கும்போது உடனடியாக தீா்வு காணப்படும் என தெரிவித்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், ஊட்டி தமிழகம் அரசு விருந்தினா் மாளிகையில் வனத்துறை, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் வன அலுவலா்கள் மற்றும் பழங்குடியினா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வனத்துறை அமைச்சா் மதிவேந்தன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:-

வனப்பாதுகாப்பு, வனவிலங்குகள் பாதுகாப்பு, மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் வனத்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வனத்துறை பணி என்பது வனத்தையும், வன விலங்குகளையும் பாதுகாக்கும் ஆத்மாா்த்தமான பணியாகும்.

அடிப்படை வசதிகள் வேண்டி வரும் பொதுமக்களிடம் வனத் துறை சாா்ந்ததா அல்லது பிற துறைகளைச் சாா்ந்த பிரச்னையா என வனத்துறை அலுவலா்கள் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து தெரிவிக்கும்போது உடனடியாக தீா்வு காணப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில், முதன்மை தலைமை வனப்பாது காவலா் சுப்ரத் மஹாபத்ரா, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலா்கள் கவுதம், கொம்மு ஓம்காரம், துணை இயக்குநா்கள் (முதுமலை புலிகள் காப்பகம்) வித்யா, அருண்கு மாா், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்சினி, தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக பொது மேலாளா் அசோக்குமாா், தலைமை உதவி வனப் பாதுகாவலா் தேவராஜ், ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்கத் தலைவா் ஆல்வாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News