உள்ளூர் செய்திகள்
மசினகுடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது
- போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசீலா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்
- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரமேசை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்
ஊட்டி,
மசினகுடி அருகே 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசீலா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். ஆனைகட்டி எப்பநாடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 19) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
இதில் வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் ரமேசை போலீசார் கைது செய்தனர்.