அங்கீகாரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு: அரசு அலுவலக உதவியாளர் சங்க முப்பெரும் விழா
- மாநில தலைவர் எஸ்.மதுரம் தலைமையில் நடைபெற்றது.
- மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
சென்னை:
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கத்தின் 3 முத்தான நிகழ்ச்சி, மாநில பொதுக்குழுக் கூட்டம் திருவல்லிக்கேணி, மாஸ்டர் மாளிகையில் இன்று மாநில தலைவர் எஸ்.மதுரம் தலைமையில் நடைபெற்றது.
அகில இந்திய தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சோ.சங்கர் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அரசு அலுவலர் ஒன்றிய சங்க மாநில தலைவர் அமிர்த குமார், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ரங்க ராஜன், அரசு ஊழியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன், பீட்டர் அந்தோணிசாமி, சுப்பிரமணி, இளங்கோவன் மற்றும் இணைப்பு சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.
முதல் நிகழ்ச்சியாக சங்க அங்கீகாரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவானதையொட்டி 75-வது பவள விழா நினைவு தூண், எஸ்.எம். தங்கும் விடுதி, எஸ்.வரதராசனார் நினைவு கூடம் ஆகியவற்றை அகில இந்திய தலைவர் கே.கணேசன் திறந்து வைத்தார். முன்னாள், இந்நாள் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கப் பட்டது.
பின்னர் நடைபெற்ற மாநில பொதுக்குழுவில், தலைமை செயலகம் முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசாணை எண். 128/6னை நடைமுறைப் படுத்தி அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 12526 ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதி யம், தீபாவளி அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். அரசாணை எண்கள் 115, 152, 135, 10/2022, 156/18னை ரத்து செய்வது போன்ற 70 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் மாநில பொருளாளர் முனியப்பன் நன்றி கூறினார்.