உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் வெளுத்து வாங்கிய கனமழை: அரூர் செலம்பை தரைப்பாலம் மூழ்கியது

Published On 2024-12-02 06:59 GMT   |   Update On 2024-12-02 06:59 GMT
  • தடுப்பணைகளில் இருபுறமும் வெள்ளம் கரைபுறண்டு ஓடுகிறது.
  • ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.causeway

தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக இடைவிடாமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

நேற்றிரவு இடை விடாது தொடர்ந்து பெய்யும் கனமழையால் தருமபுரி நகராட்சிக்குட்பட்ட அன்னை சத்யா நகர், ஆவின் நகர், நந்திநகர் பகுதிகளில் உள்ள வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளது.

சாலைகளிலும் செல்ல முடியாத அளவுக்கு முழங்கால் அளவு மழைநீர் பாய்தோடுகிறது. மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். அத்தியவாசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.

வீட்டிற்குள் உள்ள மழை நீரை மோட்டார் மூலம் சிலர் வெளியேற்றி வருகின்றனர். இதேபோல் அரூர், பொம்மிடி, பாப்பி ரெட்டிப்பட்டி, பாப்பாரப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் மற்றும் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்துள்ளது.


தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இன்று காலையும் மழைபெய்து வருகிறது.

கனமழை காரணமாக அரூர் சுற்றுவட்டார கிராமங்களான ஏ.கே.தண்டா, சிட்லிங், கல்லாறு, சூரநத்தம், கோட்டப்பட்டி, செலம்பை, தேக்கனா ம்பட்டி, நரிப்பள்ளி, வாச்சாத்தி ஏரி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகில் வாணியாறு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் தடுப்பணைகளில் இருபுறமும் வெள்ளம் கரைபுறண்டு ஓடுகிறது.

இதில் கோட்டப்பட்டி அருகே உள்ள செலம்பை - ஆவாலூரை இணைக்கும் வகையில் பல ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட தரை ப்பாலத்தை வெள்ளம் மூழ்கி சென்றது.

இதனால் அக்கிராமம் தனித்தீவாக காட்சியளி க்கிறது. மழை பாதிப்பு காரணமாக அப்பகுதி மக்கள், கால்நடை விவசாயிகள் பால் உள்ளிட்ட பொருட்களை சொசைட்டியில் ஊற்றவும், மருத்துவமனை, பள்ளி செல்வதற்கும் ஆற்றைக் கடக்க மிகவும் சிரமபட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி ஆடு, மாடுகளை மேய்ச்சல் நிலங்களில் விட முடியாமல் விவசாயிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.

மங்களப்பட்டியில் உள்ள அன்புஅரசு என்பவரது தோட்டத்தில் தேக்கு மரம் சாய்ந்து மின் கம்பம் மீது விழுந்தது. இதனால் மின் கம்பி அறுந்து அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

கனமழை காரணமாக வருவாய் துறையினர் ஆற்றோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கனமழையால் கிராம புறங்களில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. கனமழை காரணமாக அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News