தமிழ்நாடு

ஊத்தங்கரையில் வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

Published On 2024-12-02 08:20 GMT   |   Update On 2024-12-02 08:20 GMT
  • போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் வெள்ளம் பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டது.
  • சேதமடைந்த வாகனங்களை சரிசெய்ய அதிக செலவு ஆகும்.

சிங்காரபேட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இன்று வெள்ளம் பாதித்த பகுதிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் வெள்ளம் பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டது. ஊத்தங்கரை அண்ணாநகர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.

இதனால் சேதமடைந்த வாகனங்களை சரிசெய்ய அதிக செலவு ஆகும். அதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். 

Tags:    

Similar News