உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
- இந்து முன்னணி சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி:
இந்துக்கள் பற்றி அவதூறாக பேசியதாக கூறி தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய பஸ் நிலையம் அருகே அண்ணா நகர் முகப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் இசக்கிமுத்துகுமார் தலைமை தாங்கினார்.
மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் நாராயண ராஜ் முன்னிலை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர்கள் ராகவேந்திரா, சிவலிங்கம், சரவணக்குமார், செயற்குழு உறுப்பினர் பலவேசம் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நெல்லை கோட்ட இந்து முன்னணி பொறுப்பா ளர் ஆறுமுகச்சாமி மற்றும் பலர் பேசினர்.