உள்ளூர் செய்திகள்
கணேசன்
நெல்லை டவுனில் ஓட்டல் உரிமையாளர் மாயம்
- கணேசனின் ஓட்டலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.
- கடந்த 15-ந் தேதி கடையில் இருந்து வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை.
நெல்லை:
நெல்லை டவுன் கீழரதவீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது47). இவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி சமீபத்தில் இறந்துவிட்டார்.
மேலும் கணேசனின் ஓட்டலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 15-ந் தேதி கடையில் இருந்து வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. வீட்டிற்கும் செல்லவில்லை.
இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கணேசன் எங்கு சென்றார்?என அவரை தேடி வருகின்றனர்.