உள்ளூர் செய்திகள்

ஓசூர் 29-வது வார்டில், அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததால் பொதுமக்கள் அவதி

Published On 2023-05-24 15:08 IST   |   Update On 2023-05-24 15:08:00 IST
  • கவுன்சிலர், தில்ஷாத் அடிப்படைவசதிகள் நிறைவேற்றி தரவும், கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
  • புதிய தரமான சாலைகளை அமைத்து தர வேண்டும்

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சி 29-வது வார்டில், பாரதியார் நகர், ராஜகணபதி நகர், முல்லை நகர், சானசந்திரம், நஞ்சுண்டேஸ்வர நகர், ஆர்.கே.ரோடு ஹட்கோ, உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த வார்டு மாநகராட்சி கவுன்சிலராக, அ.தி.மு.க.வை சேர்ந்த தில்ஷாத் முஜிபுர் ரகுமான் உள்ளார்.

இந்த நிலையில், நேற்று வார்டு பகுதி மக்கள் திரளாக கவுன்சிலரிடம் சென்று, முல்லைநகர், பாரதியார் நகர் உள்ளிட்ட இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளன.

எனவே, புதிய தரமான சாலைகளை அமைத்து தர வேண்டும், மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியின்றி, மழைநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்துவிடும் நிலை இருந்து வருகிறது.

சுப்பிரமணிய சிவா நகரில் சாலை வசதி இல்லாததால், அவசரகாலத்தில் ஆம்புலன்ஸ் வண்டி கூட வந்து செல்லமுடியாத அவல நிலை இருந்து வருகிறது.

இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண வேண்டும் மற்றும் தெரு விளக்குகள் அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டனர்.

அவர்களுக்கு பதிலளித்து பேசிய கவுன்சிலர், தில்ஷாத் முஜிபுர் ரகுமான், "வார்டு பகுதியில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்கவும் மற்றும் அடிப்படைவசதிகள் நிறைவேற்றி தரவும், கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

மேலும், மாநகராட்சிக்கு பலமுறை கடிதங்கள் தந்துவிட்டேன். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலை நீடித்தால், வார்டு மக்களை திரட்டி, மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News