உள்ளூர் செய்திகள்

நாமக்கல் கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மண்டல இணைபதிவாளர் தகவல்

Published On 2022-10-15 09:05 GMT   |   Update On 2022-10-15 09:05 GMT
  • நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன.
  • இந்த சங்கங்களில் உத்தேசமாக காலியாகவுள்ள 181 விற்பனையாளர் மற்றும் 19 கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

நாமக்கல்:

நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த சங்கங்களில் உத்தேசமாக காலியாகவுள்ள 181 விற்பனையாளர் மற்றும் 19 கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் http://www/drbnamakkal.net என்ற இணையதளம் வழியாக மட்டுமே வருகிற நவம்பர் 14-ந் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

இதன்படி, மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறை குறித்து யூடியூப் தளத்தில் கூட்டுறவு துறை மூலம் TN COOP DEPT என்ற சேனலில் உள்ள காணொலியில் வழங்கப்பட்டு உள்ளது. எனவே விண்ணப்ப தாரர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் ெகாள்ள லாம். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News