தஞ்சையில், இன்று பெண்களுக்கான நடைப்போட்டி- மேயர் தொடங்கி வைத்தார்
- 35 வயதுக்கு உட்பட்டவர்கள், 36 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இரண்டு பிரிவின் கீழ் போட்டி நடந்தது.
- 5 கி.மீ தூரத்திற்கான இந்த போட்டியில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு நடந்து சென்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை தணுவர்சன் அறக்கட்டளை சார்பில் பெண்கள் நலன் மற்றும் உடல் ஆரோக்கியம், பெண் கல்வி, பெண் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெண்களுக்கான நடைப்போட்டி இன்று தஞ்சையில் நடைபெற்றது.
தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கிய நடைப்போட்டியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மேலவெளி ஒன்றிய கவுன்சிலர் பத்மசினி முரளிதரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
35 வயதுக்கு உட்பட்டவர்கள், 36 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இரண்டு பிரிவின் கீழ் போட்டி நடந்தது. 5 கி.மீ தூரத்திற்கான இந்த போட்டியில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு நடந்து சென்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கமும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, டாக்டர் சாத்தப்பன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, ரெட் கிராஸ் துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தணுவர்சன் அறக்கட்டளை நிறுவனர் உலகநாதன் செய்திருந்தார்.