உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

வேதாரண்யத்தில், எண்ணும் எழுத்தும் பயிற்சி

Published On 2023-06-05 09:07 GMT   |   Update On 2023-06-05 09:07 GMT
  • ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் 3 நாள் பயிற்சி நடைபெற்றது.
  • எண்ணும் எழுத்திற்கான களஞ்சியங்களை காட்சிப்படுத்தி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் ஆயக்காரன்புலம் இரா. நடேசனார் மேல்நிலைப் பள்ளியில் 164 ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 3 நாள் பயிற்சி நடைபெற்றது.

பயிற்சியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் காமராஜ், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பழனிச்சாமி (பொ), வட்டார கல்வி அலுவலர்கள் ராஜமாணிக்கம், ராமலிங்கம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாம்பசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் மற்றும் சமூக அறிவிய லுக்கான பயிற்சியை மாவட்ட கருத்தாளர்கள் நீலமேகம், முருகானந்தம், பரமசிவம், சிவபாலன் ஆகியோர் எண்ணும் எழுத்திற்கான களஞ்சியங்களை காட்சிப்படுத்தி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு இந்த திட்டத்தை எடுத்து செல்வதற்கு ஆயத்தமாக பயிற்சி அளிக்கப்ப ட்டதாக பயிற்சி யாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News