உள்ளூர் செய்திகள்
இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டத்தை தொடங்கப்பட்டது.
இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடக்கம்
- நன்னீர் மீன் இறால் வளர்ப்பில் ஏற்படும் நன்மைகள் குறித்து நிகழ்வில் கூறப்பட்டது.
- காப்பீட்டு நிறுவனம் மற்றும் மீன்வள பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை அடுத்த நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகத்தில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நன்னீர் மீன் மற்றும் இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நன்னீர் மீன் இறால் வளர்ப்பில் ஏற்படும் நன்மைகள் குறித்து நிகழ்வில் கூறப்பட்டது.
நிகழ்வில் காப்பீட்டு நிறுவனம் மற்றும் மீன்வள பல்கலைகழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபட்டது.
நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ், ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.