சர்வதேச கூட்டுறவு தினம்: கூட்டுறவு வங்கிகளில் கடன் மேளா-அமைச்சர் பெரியகருப்பன்
- சர்வ தேச கூட்டுறவு தினத்தைப் பற்றிய விழிப்புணர்வு.
- உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கடன் மேளா நடத்தப்பட்டது.
சென்னை:
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கூட்டுறவு வங்கிகள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் பயிர்க் கடன், கறவை மாட்டுக் கடன், நகைக் கடன், சுய உதவி குழுக் கடன், சிறுவணிகக் கடன், மகளிர் தொழிற்முனைவோர் கடன், மகளிர் சம்பளக் கடன், வீட்டு வசதிக் கடன் போன்ற கடன்களை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கூட்டுறவுகள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகின்றன என்ற மைய கருத்தில் மக்களுக்கு சர்வ தேச கூட்டுறவு தினத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கடன் மேளா, ரத்ததான முகாம், மரக்கன்று நடும் முகாம், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.