உள்ளூர் செய்திகள்
தண்ணீர் இன்றி வறண்டதால் களக்காடு தலையணை மூடல்; சுற்றுலா பயணிகள் செல்ல தடை - வனத்துறையினர் அறிவிப்பு
- சமீபகாலமாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இன்றி வெயிலின் தாக்கத்தால் தலையணை நீர்வீழ்ச்சி தண்ணீர் இன்றி வறண்டது.
- தொடர் வறட்சியால் அப்பகுதியில் கடும் வெப்பம் நிலவுகிறது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தலையணைக்கு தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இன்றி கடும் வெயில் கொளுத்துகிறது. வெயிலின் தாக்கத்தால் தலையணை நீர்வீழ்ச்சி தண்ணீர் இன்றி வறண்டது. மரம் செடி கொடிகளும் மழை இன்றி காய்ந்து வருகிறது. தொடர் வறட்சியால் அப்பகுதியில் கடும் வெப்பம் நிலவுகிறது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
இதற்கிடையே வறட்சியின் காரணமாக களக்காடு தலையணை இன்று முதல் மூடப்படுவதாக களக்காடு வனத்துறையினர் அறிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தலையணை நுழைவு கேட் மற்றும் சோதனை சாவடி மூடப்பட்டது.