உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி விவேகானந்தர் பாறையில் மகா தீபம்

Published On 2022-12-05 13:24 IST   |   Update On 2022-12-05 13:24:00 IST
  • பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி படகில் சென்று நாளை மாலை ஏற்றுகிறார்
  • பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசலை நோக்கி மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

கன்னியாகுமரி:

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நாளை (6-ந்தேதி) மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி தனிப்படகில் சென்று பாறையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றுகிறார்.

இதைெயாட்டி அங்குள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் பாறையில் இயற்கையாகவே அமைந்துள்ள பகவதி அம்மன் கால் தடம் பதிந்து இருந்த இடத்தில் எண்ணெய், பால், பன்னீர், தயிர், இளநீர், மஞ்சள் பொடி, சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

அதன்பின்னர் அம்மனின் பாதத்திற்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஸ்ரீபாத மண்டபத்தில் இருந்து கோவில் மேல்சாந்தி கார்த்திகை தீபத்தை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து மண்டபத்தின் மேற்கு பக்கம் கடற்கரையில் உள்ள பகவதிஅம்மன் கோவில் கிழக்கு வாசலை நோக்கி மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த தீபம் விடிய விடிய எரிந்து கொண்டே இருக்கும். இந்த தீபத்தை கடற்கரையில் இருந்தவாரே சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வணங்கி வழிபடுவார்கள்.

Tags:    

Similar News